தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பது ஆபத்தானது - நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்! - மத்திய அரசு கிருமிநாசினி தெளிப்பு

வாயில்கள் மூலம் கிருமிநாசினிகளை மனிதர்கள் மீது தெளிப்பது ஆபத்தை விளைவிக்கும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

disinfectants
disinfectants

By

Published : Sep 7, 2020, 6:55 PM IST

கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு பகுதிகளில் மக்கள் மீது கிருமிநாசினி தெளிக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. இதுதொடர்பாக பொதுநல மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதுகுறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனு தொடர்பான தனது பதிலை பிரமானப்பத்திரமாக மத்திய அரசுத் தாக்கல் செய்தது. அதில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதலில் மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிக்க அரசு பரிந்துரை செய்யவில்லை. மக்கள் தொடர்ச்சியாக கைகழுவ மட்டுமே அறிவுறுத்தியுள்ளோமே தவிர கிருமிநாசினி தெளிப்பது போன்ற அறிவுறுத்தல் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும், நுழைவு வாயில் மூலம் கிருமிநாசினி தெளிப்பதால் மனிதரின் தோல் பாதிக்கப்படலாம் எனவும் தவறுதலாக கிருமிநாசினியை சுவாசிக்கும்பட்சத்தில் அது சுவாசப்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இந்த பதில் அளித்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் இந்த கிருமிநாசினி வாயில்கள் பயன்படுத்தவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.

இதையும் படிங்க:பாஜகவினர் என்னை தனிப்பட்ட முறையில் தாக்குகின்றனர் - சுப்பிரமணியன் சாமி பகீர் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details