தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிதியமைச்சரின் ஆலோசனைக் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு - FM meeting postponded

டெல்லி: பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி வாயிலாக இன்று நடத்தவிருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

FM
FM

By

Published : May 11, 2020, 2:08 PM IST

பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நடத்தவிருந்த காணொலி வாயிலான ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்தும், சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் திட்டங்கள் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவிருந்தது.

ஊரடங்கு பாதிப்பு காரணமாக பொதுமக்கள் வங்கிகளில் செலுத்தக்கூடிய ஈ.எம்.ஐ. செலுத்துவதற்கான கால அவகாசம் மூன்று மாதங்கள் வழங்குவதாக ரிசர்வ் வங்கி முன்னர் தெரிவித்திருந்தது.

மேலும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில், ரெப்போ விகிதத்தை 5.15 விழுக்காட்டிலிருந்து 75 புள்ளிகள் குறைத்து 4.4 விழுக்காடாக குறைத்திருந்தது. இதனால் மக்கள் பெற்ற பலன்கள் குறித்தும், இன்று நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டத்தில் வங்கிகளுடன் நிர்மலா சீதாராமன் விவாதிப்பார் என்று முன்னர் கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:வளர்ச்சித் திட்டங்களில் பல்துறை வல்லுநர்கள் பங்களிப்பை செலுத்த வேண்டும்!

ABOUT THE AUTHOR

...view details