நாட்டின் முதல் பிரதமரான நேருவின் மகளும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின் 102ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1917ஆம் ஆண்டு நவ. 19ஆம் தேதி பிறந்த இந்திரா காந்தி, 1960ஆம் ஆண்டு பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர், 1966ஆம் ஆண்டு பிரதமரான இவர் 1977ஆம் ஆண்டு வரை இந்தியாவை ஆட்சி செய்தார். இவர் பிரதமராக இருந்த 1975-77 காலக்கட்டத்தில்தான் இந்தியாவில் எமெர்ஜென்சி கொண்டுவரப்பட்டது.
மலர்த்தூவி மரியாதை செலுத்தும் பிரணாப் முகர்ஜி இவரின் ஒவ்வொரு பிறந்தநாளிலும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அவருடைய நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்துவது வழக்கம். அதேபோல, இந்தாண்டும் தற்போதைய காங்கிரஸ் கட்சித் தலைவரும் இந்திரா காந்தியின் மருமகளுமாகிய சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசு முன்னாள்தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: விபத்தில் இறந்தாரா காந்தியடிகள்? சர்ச்சையை கிளப்பும் புத்தகம்!