மும்பையில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் கனமழையினால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தெற்கு மும்பையின் கொலாபா பகுதியில் ஆகஸ்ட் மாதத்தில் 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய 22 பேரை மீட்ட பால்கர் போலீஸ் - அமைச்சர் பாராட்டு! - மகாராஷ்டிரா செய்திகள்
மும்பை: மரத்தில் சிக்கித் தவித்த ஐந்து வயது சிறுமி உள்பட வெள்ளத்திலிருந்து 22 பேரை பத்திரமாக மீட்ட பால்கர் காவல்துறையினருக்கு மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கித் தவித்த 22 பேரையும், மரத்தில் தவித்துக் கொண்டிருந்த சிறுமியையும் பத்திரமாக மீட்ட பால்கர் காவல் துறையினருக்கு மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், வெள்ளத்தில் சிக்கித் தவித்த 22 பேரை பத்திரமாக மீட்ட பால்கர் காவல் துறைக்கும், எஸ்பி தத்தாத்ரேயா ஷிண்டேவுக்கும் பாராட்டுக்கள். பல இடங்களில் சாலை தடைகளை அகற்றி போக்குவரத்தை சரி செய்துள்ளனர். வெள்ளம் சூழப்பட்ட நிலையில், மரத்தில் தவித்துக்கொண்டிருந்த சிறுமியை மீட்ட காவல்துறையினரின் தைரியம் பாராட்டத்தக்கது" என பதிவிட்டுள்ளார்.