தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

துபாயிலிருந்து இந்தியா திரும்பிய 182 பயணிகள் - கன்னூர் விமான நிலையம்

கன்னூர்: துபாயிலிருந்து 182 பயணிகள் கேரளா திரும்பினர். அவர்களுக்கு கன்னூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது.

Kannur news  Air India flight  Thiruvananthapuram-Doha flight  Vande Bharat Mission news  Air India news  Air India Express  இந்தியா திரும்பிய வெளிநாட்டு பயணிகள்  கன்னூர் விமான நிலையம்  துபாய், கன்னூர்
Kannur news Air India flight Thiruvananthapuram-Doha flight Vande Bharat Mission news Air India news Air India Express இந்தியா திரும்பிய வெளிநாட்டு பயணிகள் கன்னூர் விமான நிலையம் துபாய், கன்னூர்

By

Published : May 14, 2020, 12:05 AM IST

துபாயிலிருந்து கன்னூருக்கு முதல் விமானம் நேற்றிரவு வந்திறங்கியதாக விமான நிலைய அலுவலர்கள் கூறியுள்ளனர். இந்த விமானத்தில் 182 பயணிகள் இருந்தனர். இதில் ஐந்து பேர் குழந்தைகள் ஆவார்கள்.

வளைகுடாவிலிருந்து கண்ணூர் விமான நிலையத்திற்கு செல்லும் முதல் சிறப்பு விமானம் இதுவாகும். பஹ்ரைனில் இருந்து இந்திய நாட்டினருடன் ஏர் இந்தியா விமானம் திங்கள்கிழமை இரவு கோழிக்கோடு கரிபூர் விமான நிலையத்தை அடைந்தது.

முன்னதாக மே 7ஆம் தேதியன்று கொச்சி விமான நிலையத்துக்கு பஹ்ரைனில் இருந்து விமானம் ஒன்று வந்தது. இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்ட திருவனந்தபுரம்-தோஹா விமானம் புதன்கிழமை 181 பயணிகளுடன் வந்திறங்கியது.

விமான நிலையத்தில் வெப்ப பரிசோதனை நடந்தது. கோவிட்-19 அறிகுறிகள் உள்ள பயணிகள் உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கும் மாற்றப்படுவார்கள். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள்.

ABOUT THE AUTHOR

...view details