இந்திய வனத்துறை அலுவலர் பர்வீன் கஸ்வான், தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு ஃபிளமிங்கோ பறவைகள், தனது குஞ்சுக்கு பாலூட்டும் அபூர்வ காணொலியைப் பதிவிட்டார். இந்தப் பதிவானது அசுர வேகத்தில் சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.
அதில், 'இந்தப் பறவைகள் சண்டையிடவில்லை. இது இயற்கையின் மிகவும் அதிசயமான ஒன்று ஆகும். ஃபிளமிங்கோ பறவை தன் செரிமானப் பாதைகளில் சுரக்கும் 'கிராப்' (crop) பாலை, தனது குஞ்சுவிற்கு அளித்து வளர்க்கின்றன. இதை எவ்வாறு ஒன்று சேர்ந்து செய்கிறது என்பதைப் பாருங்கள்' எனப் பதிவிட்டிருந்தார்.
ஃபிளமிங்கோ போன்ற பறவைகள் தங்களது குஞ்சுகளுக்கு அளிக்கும் கிராப் பால், அதன் செரிமானப் பாதைகளில் உற்பத்தியாகும். இதில் புரதமும் (protein), கொழுப்புச் சத்தும் நிறைந்து காணப்படுகிறது. இச்செயலானது குஞ்சுகள் தானாக சாப்பிடும் வரை, தொடர்ந்து நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
இந்தப் பாலை தொடர்ச்சியாக குஞ்சுகளுக்கு அளிக்கும் போது, பிளமிங்கோ பறவையின் பிங்க் நிறம் படிப்படியாக குறைந்து வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும். ஆனால், இந்த நிற வேறுபாடு குஞ்சுகள் தானாக உணவு அருந்திய பிறகு சரியாகி விடும். இந்த மாதிரி ஆண், பெண் ஆகிய இருபாலின ஃபிளமிங்கோ பறவைகளும் குஞ்சுகளுக்கு உணவு அளிப்பார்கள். இதே மாதிரி, புறாக்களும் தங்கள் குஞ்சுகளுக்கு, மேல் செரிமானப் பாதை வழியாக பால் வழங்குகிறது சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க:திருமணத்துக்குப் பிறகு கம்பேக் தரும் ஜெனிஃபர் லாரன்ஸ்