தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா நிதி: உண்டியல் பணம் ரூ.9000 வழங்கிய 5 வயது சிறுமி

காந்திநகர்: ஐந்து வயது சிறுமி ஒருவர் கரோனா நிவாரண நிதிக்காக தனது உண்டியல் சேமிப்பு பணம் ஒன்பதாயிரம் ரூபாய்யை வழங்கியுள்ளார்.

five-year-old-girl-from-ankleshwar
five-year-old-girl-from-ankleshwar

By

Published : Mar 30, 2020, 10:44 PM IST

குஜராத் மாநிலம் அங்கலேஷ்வர் பகுதியைச் சேர்ந்த பாரிஸ் வியாஸ் எனும் 5 வயது சிறுமி, தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த ஒன்பதாயிரம் ரூபாய்யை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அதுகுறித்த கணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

உண்டியல் பணம் ரூ.9000 வழங்கிய 5 வயது சிறுமி
உலகை உலுக்கும் கரோனாவைக் கட்டுப்பட்டுத்த பல்வேறு நவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன்படி பிரதமர் மோடி, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாட்டுமக்கள் தங்களால் முடிந்த நன்கொடைகள் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதைத்தொடர்ந்து தொழிலதிபர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், தனியார் தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்டோர் கரோனா நிவாரண நிதி வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா: ஒரே வாரத்தில் ரூ. 1.25 கோடி நிதி திரட்டிய சானியா மிர்சா!

ABOUT THE AUTHOR

...view details