கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.
இருந்தபோதிலும் நாட்டில் கரோனா வைரஸ் பரவல், அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. நாட்டில் இதுவரை 65 ஆயிரத்து 288 பேர் உயிரிழந்தும், 36 லட்சத்து 91ஆயிரத்து 167பேர் பாதித்தும் உள்ளனர்.
இதில் கடந்த 24 மணி நேரத்தில், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (செப்.1) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில், ஐந்து மாநிலங்களில் 536 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் மகாராஷ்டிராவில் 11 ஆயிரத்து 852 பேரும், ஆந்திராவில் பத்தாயிரத்து நான்கு பேரும், கர்நாடகாவில் ஆறு ஆயிரத்து 495 பேரும், தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 956 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 4 ஆயிரத்து 782 பேரும் அடங்குவார்கள்.
இந்த ஐந்து மாநிலங்களில் அதிகபட்சமாக 65 ஆயிரத்து 81 பேர் குணமடைந்தாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க...சுதந்திரக் காற்றை சுவாசிக்கவுள்ள மருத்துவர் கஃபில் கான் : திரும்பப் பெறப்படும் தேசிய பாதுகாப்பு சட்டம்