தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போலி ஆதார் அட்டை மூலம் சட்டவிரோதமாக குடியேறிய ரோகிங்கியாக்கள் கைது! - சட்டவிரோதமாக குடியேறிய ரோகிங்கியாக்கள் கைது

ஹைதராபாத்: போலியான ஆதார் அட்டை, பாஸ்போர்ட்களைக் கொண்டு சட்டவிரோதமாக குடியேறியதாக மூன்று பெண்கள் உள்பட ஐந்து ரோகிங்கியா இஸ்லாமியர்களை தெலங்கான காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

five-rohingyas-arrested-in-telangana-for-illegal-immigration-getting-aadhar-indian-passport
five-rohingyas-arrested-in-telangana-for-illegal-immigration-getting-aadhar-indian-passport

By

Published : Jun 10, 2020, 3:45 PM IST

ஜாகிராபாத் பகுதிக்கு அருகி்லுள்ள சங்காரெட்டி மாவட்டத்தில் 25 முதல் 45 வயதிற்குள்பட்ட ரோகிங்கியா இஸ்லாமியர்கள் சிலர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக தெலங்கானா காவல்துறையினருக்குதகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர் மூன்று பெண்கள் உள்பட ஐந்து பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து போலியான ஆதார் கார்டுகள், பாஸ்போர்ட்டுகள், வாக்காளர் அட்டை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து பேசிய காவல்துறையினர், பல வருடங்களுக்கு முன்பு வங்கதேசத்திலிருந்து மியான்மர் வழியாக ரோகிங்கியாக்கள் இந்தியாவிற்குள் நுழைந்தனர். இவர்கள் கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், ஜாகிராபாத் பகுதிகளில் தங்கி தினக்கூலிகளாக பணிபுரிந்துவருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடமிருந்தும், தங்களை இந்திய மக்களாக அடையாளப்படுத்த வைத்திருந்த போலி ஆதார் அட்டைகள், பாஸ்போர்ட்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்திய தண்டனைச் சட்டம் 420இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்றுவருகி்றது என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details