தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகார் தேர்தல்: ஏ.ஐ.எம்.ஐ.எம். எம்எல்ஏக்கள் அசாதுதீன் ஓவைசியுடன் சந்திப்பு! - அசாதுதீன் ஓவைசி

ஹைதராபாத்: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏ.ஐ.எம்.ஐ.எம். சார்பில் வெற்றிபெற்ற 5 எம்எல்ஏக்கள் அக்கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசியை நேரில் சந்தித்தனர்.

ஏ.ஐ.எம்.ஐ.எம் எம்எல்ஏ.க்கள் அசாதுதீன் ஓவைசியுடன் சந்திப்பு
ஏ.ஐ.எம்.ஐ.எம் எம்எல்ஏ.க்கள் அசாதுதீன் ஓவைசியுடன் சந்திப்பு

By

Published : Nov 12, 2020, 9:22 PM IST

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 243 தொகுதிகளுக்குமான முடிவை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று (நவ. 11) வெளியிட்டது. அதில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியூ - என்டிஏ கூட்டணி 125 இடங்களில் வென்று பெரும்பான்மை பெற்று, ஆட்சியை தக்கவைத்துள்ளது.

இந்த நிலையில், அங்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி சார்பில் வெற்றி பெற்ற அக்தருல் இமான் (அமூர்), முகமது இஷார் அஸ்ஃபி (கொச்சடமாம்), ஷாஹனாவாஸ் ஆலம் (ஜோகிஹாட்), சையத் ருக்னுதீன் (பைசி) மற்றும் அசார் நயீமி (பகதர்குஞ்ச்) ஆகியோர் அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இதையும் படிங்க:அயோத்தி பூமி பூஜைக்கு ஓவைசி வரவேண்டுமென பாஜக அழைப்பு!

ABOUT THE AUTHOR

...view details