தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து உத்தரப் பிரதேசத்திற்கு குடிபெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரி மத்தியப் பிரதேசம் மாநிலம் நர்சிங்பூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். மாம்பழங்களை ஏற்றிச்சென்ற இந்த லாரியில் இரண்டு ஓட்டுநர்கள் உள்பட மொத்தம் 18 பேர் இருந்துள்ளனர். இந்தத் தகவலை நர்சிங்பூர் மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்தியுள்ளார்.
விபத்தில் இரண்டு பேருக்கு தலையில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த தொழிலாளர்கள் அனைவரும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அசதியால் தண்டவாளத்தில் தூங்கிய, 16 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் குடிபெயரும் தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'மகாராஷ்டிரா ரயில் விபத்து போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக் கூடாது' - ரயில்வே பாதுகாப்பு ஆணையம்