தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

துப்பாக்கி முனையில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு! - துப்பாக்கி முனையில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு

ஜார்க்கண்ட்: ஜாம்ஷெட்பூரில் 17 வயது சிறுமி துப்பாக்கி முனையில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Five men gang-rape girl at gunpoint
Five men gang-rape girl at gunpoint

By

Published : Oct 10, 2020, 4:18 PM IST

ஜார்க்கண்ட் மாநிலம் பாக்பெரா பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தனது ஆண் நண்பருடன் இருந்துள்ளார். அப்போது அங்குவந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அச்சிறுமியின் நண்பரை கட்டிவைத்துள்ளனர்.

அதையடுத்து அவர்கள் சிறுமியை துப்பாக்கி முனையில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அங்கிருந்து தப்பித்த இருவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர், ஷங்கர் தியு, ரோஷன் குஜூர், சூரஜ் பட்ரோ, சன்னி சோரன் மற்றும் ஒரு சிறுவனை கைதுசெய்தனர்.

தற்போது அந்தச் சிறுவன் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பட்டுள்ளார். மீதமுள்ள நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த கைத்துப்பாக்கி மற்றும் இரு குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க:உ.பி. கூட்டுப்பாலியல் வழக்கு: நீதி கேட்டு பகுஜன் சமாஜ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details