மதுபான விற்பனைக்கு புகழ்பெற்ற புதுச்சேரியில் மதுப்பிரியர்களை ஈர்ப்பதற்காகப் புதுவிதமான மதுபாட்டில்கள் அறிமுகம் செய்யப்பட்டுவருகின்றன. வருகின்ற கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு புதுவித பீர் கேன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
முதலில் பீர் 500 மிலி கேன்களில் கிடைத்தது. தற்போது ஐந்து லிட்டர் கொள்ளவு கொண்ட கேனில் ஜில் பீர் விற்பனைக்கு வந்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்திலிருந்து இந்த பீர் கேன் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை இரண்டாயிரம் ரூபாய் என்றும் இந்தக் கேனை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த பீருக்கு காலவதி தேதி இல்லை என்பது கூடுதல் சிறப்பு.