தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நக்சலைட் தாக்குதலில் பாஜக எம்எல்ஏ பலி

தண்டேவாடா: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

நக்சலைட்டுகள் தாக்குதல்

By

Published : Apr 10, 2019, 7:13 AM IST

சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தாண்டேவாடா பகுதி. இந்த பகுதியில் பாஜக எம்எல்ஏ பீமா மந்தாவி தனது ஆதரவாளர்களுடன் நான்கு சக்கர வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டார். நகரின் மையப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பரப்புரை வாகனம் வெடித்துச் சிதறியது. இந்த தாக்குதலில் வாகனத்தில் இருந்த பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட ஐந்து பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயேப் உயிரிழந்தனர். மக்களவைத் தேர்தல் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்த தாக்குதலை நக்சலைட்டுகள் அரங்கேற்றியுள்ளனர்.

மேலும் மக்களவைத் தேர்தலில் யாரும் வாக்களிக்கக் கூடாது என உள்ளூர்வாசிகளை நக்சலைட்டுகள் ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தனர். இதையடுத்து அதனை கருத்தில்கொண்டு தண்டேவாடா பகுதியில் பரப்புரை மேற்கொள்ள வேண்டாம் என வேட்பாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். அதனை மீறி பாஜக எம்எல்ஏ பரப்புரை மேற்கொண்டார் எனக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு நாட்டு வெடிகுண்டுகளை நக்சலைட்டுகள் பயன்படுத்தி இருப்பதும், பாஜக எம்எல்ஏ புல்லட் ப்ரூப் வாகனத்தை பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருந்தும் அதிக சக்தி கொண்ட வெடிகுண்டுகள் என்பதால் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், பாதுகாப்பு படையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். உயர் மட்டக்குழு கூட்டத்தை அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் ஆலோசனை நடத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details