தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராஜஸ்தான் சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு! - ராஜஸ்தான் காவல் துறை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் குழந்தை உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

Accident news
Road accident

By

Published : Jun 1, 2020, 4:36 PM IST

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் குழந்தை உள்பட ஐந்து பேர் உயிரிழந்ததாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து கூறிய காவல் துறையினர், "சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜீன்ஜுனு மாவட்டம் சிக்கோலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

விபத்தில் சிக்கியவர்களின் உடல்கள் அருகிலுள்ள பகாடியா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. விபத்து நடந்த இடத்திலேயே குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" எனத் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details