தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் பேருந்து விபத்து: ஐந்து பேர் உயிரிழப்பு! - போர் கோட்

மும்பை: போர் காட் அருகே தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Maharashtra

By

Published : Nov 4, 2019, 12:28 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து காரட் பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று 45 பயணிகளை ஏற்றிக்கொண்டு புனே-மும்பை நெடுஞ்சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தது.

அப்போது, அப்பேருந்தானது ராய்காட் மாவட்டம் போர் கோட் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது,வனப்பகுதி வளைவு அருகேபேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும், விபத்தில் படுகாயமடைந்த பயணிகளை கோபோலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க:உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் மோதி உயிரிழந்த நண்பர்கள்!

ABOUT THE AUTHOR

...view details