ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதி சட்டப்பிரிவான 370ஐ, மத்திய அரசு ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கியது. அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முந்நாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா ஆகியோரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
காஷ்மீர் தலைவர்கள் வீட்டுக் காவலிலிருந்து விடுவிப்பு! - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
இவர்கள் தவிர முக்கியத் தலைவர்களான இப்தாப் ஜாபர், குலாம் நபி பட், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாஷீர் மீர், மெகபூபா கட்சி முக்கியப் பிரமுகர் ஜகூர் மீர், யாஷீர் ரேஷி ஆகியோரும் வீட்டுக் காவலில் இருந்தனர். தற்போது அவர்கள் வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, நவம்பர் 25ஆம் தேதி, திலாவர் மிர், குலாம் ஹாசன் உள்ளிட்டோருக்கு வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் விவகாரம்: இந்தியாவுக்கு சீனா திடீர் அறிவுரை