மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள பெல்டங்காவில், பூஜையின் ஒரு பகுதியாக துப்னி காட் என்னுமிடத்தில் படகில் சென்று துர்கா சிலையை ஆற்றில் கரைக்க முயன்றபோது இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
துர்கா பூஜையின்போது விபத்து 5 பேர் பலி! - துர்கா பூஜை
கொல்கத்தா: முர்ஷிதாபாத் மாவட்டத்தின் அமைந்துள்ள பெல்டங்காவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
துர்கா பூஜையின்போது விபத்து 5 பேர் பலி!
சம்பவம் நடந்த உடனேயே, உள்ளூர் மக்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கிய ஐந்து பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
தகவலறிந்து சம்பவ இடத்தில் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில காவல்துறை, தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Last Updated : Oct 27, 2020, 8:16 AM IST