மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள தங்கல் பஜாரில் இன்று காலை 09:30 மணிக்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட ஐந்து பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் குண்டுவெடிப்பில் 5 பேர் படுகாயம்! - சிசிடிவி வெளியீடு - மணிப்பூரில் குண்டு வெடிப்பு
இம்பால்: மணிப்பூரில் குண்டுவெடித்ததில், எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் நான்கு பேர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
Five cops, one civilian injured in Imphal IED blast
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த அமைப்பு இதுவரை பொறுப்பு ஏற்காத நிலையில், இது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். தற்போது, குண்டுவெடிப்பின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க...வாழைப்பழத்தில் ரசாயன திரவியம்: நடவடிக்கை எடுக்குமா அரசு?