தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'எம்எல்ஏ' 'போலீஸ்' 'அரசு அலுவலர்கள்'... - 400 பேரை தனிமைப்படுத்திய கேரள அரசு! - 5 mla isolated at kerala

திருவனந்தபுரம்: பாலக்காட்டில் வாளையார் சோதனைச் சாவடிக்குள் நுழைந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏ உட்பட சுமார் 400 பேரைத் தனிமைப்படுத்த கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

dsd
sds

By

Published : May 14, 2020, 5:25 PM IST

கேரள மாநிலம், பாலக்காட்டில் அமைந்துள்ள வாளையார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான மக்கள் ஊருக்குள் வருவதற்கு காத்திருந்தனர். அரசு அலுவலர்களிடம் அனுமதி சீட் கிடைக்க, தாமதமானதால் மக்கள் சிக்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானது.

இந்தத் தகவலறிந்து சோதனைச் சாவடிக்கு விரைந்த ஐந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுக்குத் தேவையான உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் ஆகியவற்றை வழங்கினர்.

இந்நிலையில், சோதனைச் சாவடி வழியாக வந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகிருப்பது கேரள அரசு அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுகாதாரப் பணியாளர்கள், சோதனைச் சாவடியைத் தாண்டி வந்த மக்கள், பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள், அரசு அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய 400 பேரை இரண்டு வாரங்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதுவரை அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 534ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனா பிடியிலிருந்து விடுவிக்குமா எறும்புதின்னிகள்?

ABOUT THE AUTHOR

...view details