தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானாவில் ஐந்து மாவோயிஸ்டுகள் கைது! - மாவோயிஸ்டு கைது

ஹைதராபாத்: பத்ராட்ரி கோத்தகுடெம் பகுதியிலிருந்த ஐந்து மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தெலுங்கானா
தெலுங்கானா

By

Published : Nov 4, 2020, 4:32 PM IST

தெலங்கானா மாநிலம் பத்ராட்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காந்தி சிலை அருகே சந்தேகத்திற்கிடமாக இருந்த ஐந்து பேரை காவல் துறையினர் விசாரணை செய்தனர்.

அப்போது அவர்கள் ஐந்து பேரும் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த கோரம் ஜோகா, போடியம் ஜோகா, பாடிசா லட்சுமா, சோடி லக்மா மற்றும் கோர்சா சுரேஷ் என்பது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி நக்சல் கும்பலைச் சேர்ந்த ஜெகதீஷ் மற்றும் நாகமணி ஆகியோருக்கும், ஐந்து மாவோயிஸ்ட்டுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தெலுங்கானா காவல் துறையினர் ஐந்து பேரை கைதுசெய்தது மட்டுமின்றி, அவர்கள் வைத்திருந்த பொருள்களைப் பறிமுதல்செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details