தமிழ்நாடு

tamil nadu

நெருங்கியது மீன்பிடி தடைகாலம்: அரசிடம் உதவி கோரும் மீனவர்கள்

புதுச்சேரி : மீன்பிடி தடை காலம் முடிய இன்னும் 5 நாள் உள்ளதால், படகு பராமரிப்பிற்கு அரசு உதவி வழங்க வேண்டுமென காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By

Published : May 27, 2020, 11:59 AM IST

Published : May 27, 2020, 11:59 AM IST

காரைக்கால் மீன்பிடி துறைமுகம்
காரைக்கால் மீன்பிடி துறைமுகம்

புதுச்சேரி, காரைக்காலில் மீன்பிடி தடை காலம் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், மே 31ஆம் தேதி மீன்பிடி தடைகாலம் முடிந்து, ஜூன் 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் என மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் வருமானம் இன்றி தவிக்கும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள், படகு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு பணிகளை எவ்வாறு உடனடியாக முடிப்பது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

இது தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள காரைக்கால் மீனவர்கள், ”மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கக்கூடிய தடைக்கால உதவியை உடனே முதலமைச்சர் நாராயணசாமி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு போக்குவரத்து தொடங்கினால் மட்டுமே தொழிலுக்கு போக முடியும்.

அதுபோல ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வரும் மீன்களை வெளி மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கு ஏதுவாக, புதுச்சேரி அரசு வெளி மாநிலத்திற்கு போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:’மீனவர்கள் ஜூன் 1 முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்’

ABOUT THE AUTHOR

...view details