புதுச்சேரி மீனவர்களுக்கு ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த முறைக்கான மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி மீனவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்று மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நிவாரணம் வேண்டும்: மீனவர்கள் முற்றுகைப் போராட்டம்! - puducherry fishermen protest
புதுச்சேரி: மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி சட்டபேரவை உறுப்பினருடன் மீனவர்கள், மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இதனை கண்டித்து உப்பளப் பகுதி மீனவர்கள் அந்த தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகனுடன் சேர்ந்து, தேங்காய்த்திட்டு துறைமுகத்திலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலர்கலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின் அலுவலர்கள் மீனவர்களுடன் நடத்திய பேச்சுவார்தையில், விடுபட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை வழங்க உத்தரவாதம் வழங்குவதாகக் கூறி பிரச்னையை சுமூகமாக முடித்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டு மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.