அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கறுப்புக்கொடி ஏற்றி கண்டனம் - கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் கண்டனம்
புதுச்சேரி: மத்திய, மாநில அரசை கண்டித்து காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தங்கள் வீடுகள், படகுகளில் கறுப்புக்கொடி ஏற்றி கண்டனத்தை தெரிவித்தனர்.
மத்திய அரசு மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் டீசல் மானியத்தை ரத்து செய்ய இருப்பதாக வெளியான தகவல் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாது டீசல் விலை உயர்வு, மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்குவதில் குளறுபடி போன்றவற்றை கண்டித்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களிலும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கிராமங்களில் உள்ள வீடுகள், படகுகளில் கறுப்புக்கொடி ஏற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தனர்.