மத்திய, மாநில அரசுகள் அறிவித்த திட்டங்களை முடக்கி மீனவர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து புதுச்சேரியில் உள்ள 18 மீனவ பஞ்சாயத்தார் இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால், நேற்று (ஜூன் 25) இரவு அனைத்து மீனவர்களுக்கும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதைப்பற்றி மீனவ பஞ்சாயத்து தரப்பில் கூறுகையில், இந்த அறிவிப்பு உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ளது. மஞ்சள் கார்டு வைத்துள்ளவர்கள், வருமான வரி சான்றிதழ், ஒரு வீட்டில் ஒருவருக்கு மேல் ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கு தடைக்கால நிவாரணம் கிடையாது என கூறப்பட்டுள்ளது. அதனால் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும்'' என தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று (ஜூன் 26) காலை தலைமைச் செயலகம் முதல் காந்தி சிலை வரையிலான பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் திரண்டனர். கருப்புக்கொடி ஏந்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன், அரசு கொறடா அனந்தராமன் உள்ளிட்ட மீனவ பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஒருமணி நேரத்திற்கு மேலாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிரண் பேடிக்கு எதிராக மீனவர்கள் கடலில் ஆர்ப்பாட்டம் இது குறித்து அரசு கொறடா அனந்தராமன் பேசுகையில், ''இன்று அனைத்து மீனவ மக்களுக்கும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க வலியுறுத்தி நடுக்கடலில் கருப்புக்கொடி ஏந்தி கிரண்பேடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மீனவர்களுக்கு ஆதரவாக கடலோர காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றோம்'' என்றார்.
இதையும் படிங்க:புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா