வங்க கடலில் உருவாகியிருக்கும் புல் புல் புயல் காரணமாக கடலில் அதிவேக காற்றும், கடல் சீற்றமும் இருக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை, கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் தஞ்சை மாவட்ட கடற்கரை பகுதிகளானதம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ,அண்ணா நகர், புதுத்தெரு உள்ளிட்ட 37 மீன்பிடித் தளங்களில் உள்ள 1,200-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள், 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் ஆகியவை கடலுக்கு செல்லாமல் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இதையும் படிங்க: 760 மாணவ, மாணவிகளுக்கு சொந்த செலவில் குடை வழங்கல் - ஆச்சர்யப்படுத்திய தலைமை ஆசிரியர்!