தமிழ்நாடு

tamil nadu

சாகர்மாலா திட்டம் குறித்து மீனவர்களிடம் கருத்துக் கேட்பு

புதுச்சேரி: சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரி துறைமுகம் மேம்படுத்துவது குறித்து புதுச்சேரி மீனவர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

By

Published : Aug 2, 2019, 9:51 PM IST

Published : Aug 2, 2019, 9:51 PM IST

கருத்துக் கேட்பு

புதுச்சேரியில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரி துறைமுகத்தை விரிவாக்கும் பணி தொடங்க உள்ளது. இதற்காகப் புதுச்சேரி மீனவ மக்களிடம் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை சார்பில் கருத்துக்கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துறை இயக்குநர் ஜெகஜோதி உட்பட அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய மீனவ பிரதிநிதிகள் துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் போது தற்போது உள்ள சிறிய துறைமுகத்தில் தூர்வாரப்படாமல் உள்ளதால் படகுகள் தரையை தட்டி சேதமடைகின்றன. எனவே, இதனை அரசு முதலில் சரிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், இத்திட்டத்தை செயல்படுத்தும்போது மீனவர் வாழ்வுரிமை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

சாகர்மாலா திட்டம் குறித்து மீனவர்களிடம் கருத்துக் கேட்பு

இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தேசிய மீனவர் பேரவைத் தலைவர் இளங்கோ, துறைமுக விரிவாக்கத் திட்டத்தில் மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு பாதிப்பு இல்லாமலும் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலும் அரசு இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும், புதுச்சேரியில் மீனவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details