ஊரடங்கில் முடங்கி கிடக்கும் மக்களிடையே ’டிஓஎஃப்’ என்ற வீடுகளுக்கே வந்து மீன்களை வழங்கும் செயலி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இது குறித்து வேளாண்துறை அமைச்சர் டாக்டர் பிரேம் குமார் , "மீன்களை வீட்டிற்கு சென்று வழங்குவதற்காக 'DOF' என்ற செயலியை மீன்வளத்துறை உருவாக்கியுள்ளது. இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள் விநியோக கட்டணம் ஏதும் இல்லாமல் நல்ல மீன்கள் வழங்கப்படும். நாடு பூட்டப்பட்டுள்ள நிலையில் இது மக்களிடையே பிரபலமாகி வருகிறது" என்று தெரிவித்தார்.