கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் இன்ஜின் வைத்த படகுகளைப் பயன்படுத்தி, மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்ஜின் வைத்த படகுகளுக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, மீனவர்கள் கட்டுமரம் உள்ளிட்ட பாரம்பரிய படகுகள் மூலம் மீன்பிடிக்க, கடலுக்குச் செல்கின்றனர்.'
அந்தவகையில் புதுச்சேரி மாநில, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சிலர், ஃபைபர் படகுகளில் துடுப்புகளைப் பொருத்தி மீன் பிடித்து வருகின்றனர்.