காரைக்கால் மாவட்டம் கருக்களாச்சேரி கிராமத்தில் ராஜீவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் உள்ளது. இங்கு கொடுவா மீன், கல் நண்டு வளர்ப்பு குறித்த பயிற்சி, மீனவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
கொடுவா மீன்கள் ஏற்றுமதிக்கு ரெடி! - கொடுவா மீன்கள்
காரைக்கால்: ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையத்தில் வளர்க்கப்பட்ட கொடுவா மீன்கள் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
![கொடுவா மீன்கள் ஏற்றுமதிக்கு ரெடி! fish](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6472729-743-6472729-1584638946457.jpg)
அதன்படி கடந்த 11 மாதங்களாக கொடுவா மீன் வளர்ப்பு குறித்து பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்ட நிலையில், அதன் அறுவடை நிகழ்ச்சி நேற்று (மார்ச் 20) நடைபெற்றது. 11 மாதங்களுக்கு முன்னர் மீன் வளர்ப்பு பண்ணையில் குஞ்சுகளாக விடப்பட்ட மீன்கள் தற்போது ஒரு கிலோ அளவுக்கு வளர்ந்து 15 டன் அளவிலான மீன்கள் உற்பத்தியாகி உள்ளன.
இவைகளை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, ராஜீவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் எஸ்.கந்தன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் இம்மீன்கள் அனைத்தும் விற்பனைக்காக காரைக்காலில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என தெரிவித்தனர்.