தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 26, 2020, 4:28 PM IST

ETV Bharat / bharat

மத்திய அரசு மேற்கொண்ட சரியான நடவடிக்கை - ராகுல் காந்தி

டெல்லி: அவசர கால சிறப்பு நிதி குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, மத்திய அரசு மேற்கொண்ட சரியான நடவடிக்கை என பாராட்டியுள்ளார்.

Raga
Raga

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைச் சமாளிக்க 1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு அவசர கால சிறப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சுகாதாரத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ரூ. 50 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு, ஐந்து கிலோ கோதுமை அல்லது அரிசி, அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவசம் என பல்வேறு அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசு சரியான திசையில் செல்ல ஆரம்பித்துள்ளது. அதன் முதலாவது நடவடிக்கையே இன்று அறிவித்த நிதி தொகையாகும். விவசாயிகள், தினக்கூலிகள், தொழிலாளர்கள், பெண்கள், வயதானவர்கள் என பல்வேறு தரப்பினர் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு இவர்களுக்கு கடன் பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜம்முவில் 3.5 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 உதவித்தொகை

ABOUT THE AUTHOR

...view details