தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

17ஆவது மக்களவைக் கூட்டத்தொடர் ஜூனில் ஆரம்பம்! - புதிய மக்களவை கூட்டத்தொடர்

டெல்லி:புதிய மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் ஆறாம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

லோக் சபா

By

Published : May 27, 2019, 8:35 AM IST

17ஆவது மக்களவைத் தேர்தலில் 303 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த மோடி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனைத்தொடர்ந்து வருகின்ற மே 30ஆம் தேதி மாலை 7 மணிக்கு நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். அப்போது, மத்தியில் அமைய இருக்கும் புதிய ஆட்சியின் அமைச்சர்களும் மோடியுடன் பதவியேற்க உள்ளனர்.

இதனையடுத்து, மே31 ஆம் தேதி நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் முதல் மக்களவைக் கூட்டத்தொடர் எப்போது நடத்தப்படும் என்று முடிவு செய்யப்படும். இந்நிலையில், 17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்ஜூன் ஆறாம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தொடர் ஆறு அமர்வுகளாக நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details