தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா சிகிச்சைக்காக மாற்றப்பட்ட ரயில் பெட்டி - முதல் நோயாளி அனுமதி

டெல்லியில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க மாற்றப்பட்ட ரயில்வே பெட்டியில் முதல் நோயாளி தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Shakur Basti COVID Care Cente
Shakur Basti COVID Care Cente

By

Published : Jun 24, 2020, 6:17 PM IST

Updated : Jun 24, 2020, 8:10 PM IST

கோவிட்-19 தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, கரோனா வைரஸ் தொற்றால் மகாராஷ்டிராவுக்கு அடுத்தப்படியாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக டெல்லி இருக்கிறது.

இதுகுறித்த வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கரோனா நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சையளிக்கப்படுவதில்லை. நோயாளிகள் விலங்குகளைவிட மோசமாக நடத்தப்படுகின்றனர். குறிப்பாக, டெல்லியில் நிலை கொடூரமானதாகவும் பரிதாபகரமானதாவும் உள்ளது" என்று காட்டமாக விமர்சித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்தைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து இரண்டு உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை ஜூன் 14ஆம் தேதி நடத்தினார். அதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை தேசிய தலைநகர் பகுதியுள்ள அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது டெல்லியில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ரயில் பெட்டிகள் சிகிச்சையளிக்க ஏற்றவாறு மாற்றப்படும் என்றார். அதன்படி, டெல்லியின் ஷாகுர் பஸ்தி என்ற பகுதியில் ரயில்வே பெட்டிகள் கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க ஏற்றவாறு மாற்றப்பட்டது.

இந்நிலையில், ஷாகுர் பஸ்தி பகுதியிலுள்ள இந்த கரோனா சிகிச்சை மையத்தில் முதல் கரோனா நோயாளி அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் - மத்திய அமைச்சரவை முடிவு

Last Updated : Jun 24, 2020, 8:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details