தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மனிதர்கள் மீதான முதற்கட்ட கோவாக்சின் பரிசோதனை நிறைவு!

கரோனாவுக்கு எதிராகக் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி முதற்கட்ட பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக தடுப்பூசி சோதனைக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

first-part-of-phase-1-of-covaxin-human-trial-completed-at-pgi-rohtak
first-part-of-phase-1-of-covaxin-human-trial-completed-at-pgi-rohtak

By

Published : Jul 26, 2020, 12:16 PM IST

கரோனாவுக்கு எதிரான கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஜூலை 1ஆம் தேதி அனுமதியளித்தது. இந்நிலையில் கோவாக்சின் தடுப்பு மருந்தினை மனிதர்கள் மீது செலுத்தி முதற்கட்ட சோதனை முடிவடைந்துள்ளதாக தடுப்பூசி சோதனைக் குழுவின் முதன்மை ஆய்வாளர் சவிதா வர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ''இந்தியா முழுவதும் கோவாக்சின் மருந்தின் முதற்கட்ட சோதனை 50 பேர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் நல்ல முன்னேற்றத்தைக் கொடுத்துள்ளன. முதற்கட்ட சோதனை முடிவடைந்துள்ள நிலையில், சனிக்கிழமை இரண்டாம் கட்ட சோதனை தொடங்கப்பட்டது. அதில் ஆறு பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது'' என தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி சோதனைக் குழுவின் முதன்மை ஆய்வாளர் சவிதா வர்மா

தெலங்கானாவின் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலஜி நிறுவனம் ஆகிவற்றுடன் இணைந்து கோவாக்சினைக் கண்டறிந்துள்ளது.

இதையும் படிங்க:'கரோனாவை ஒழிக்க அனுமனை தினமும் 5 முறை வணங்குங்கள்'

ABOUT THE AUTHOR

...view details