நெதர்லாந்துக்கான இந்தியத் தூதர் வேணு ராஜமோனி. தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், டச்சு - இந்தியா இடையேயான நீண்டகால தொடர்பை விரிவாக எடுத்துரைக்கும் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். 'India and the Netherlands, Past, Present and Future' என தலைப்பிடப்பட்ட இந்த புத்தகம் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், அவர் எழுதிய இந்த புத்தகம் குறித்து நம் ஈடிவி பாரத்துக்கு பிரத்யேகப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "இந்தியாவில் நான்கு முக்கிய டச்சு காலனி ஆதிக்கங்கள் இருந்தன. அதில் ஒன்று தமிழ்நாட்டின் கிழக்கு கடலோரத்திலும் (கோரமண்டல்) அமைந்திருந்தது. டச்சுக்காரர்களின் ஆடை வணிகத்தில் இந்த காலனி வணிகம் பெரும் பங்காற்றியது. இங்கிருந்து சீனா, இந்தோனேசியா, ஐரோப்பா எனப் பல்வேறு நாடுகளுக்கும் ஆடை ஏற்றுமதி செய்யப்பட்டன.
மேலும், தமிழ்நாட்டிற்கு வந்த மதப்பரப்பாளர்கள் (மெஷினரீஸ்) இங்குத் தமிழ் கற்றுக்கொண்டு, இந்து மதம் குறித்து டச்சு மொழியில் புத்தகங்கள் எழுதியுள்ளனர்.