தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹோண்டா நிறுவனத்தின் முதல் அதிநவீன விற்பனை நிலையம்! - Gurugram

மும்பை: இருசக்கர வாகன உற்பத்தியில், உலகின் இரண்டாவது நிறுவனமான ஹோண்டா, தனது உயர் ரக வாகனங்களை எளிதாக வாடிக்கையாளர்களுக்கு விற்கும் வகையில், அதிநவீன விற்பனை நிலையத்தை திறந்துள்ளது.

அதிநவீன விற்பனை நிலையம்

By

Published : Apr 21, 2019, 2:13 PM IST

Updated : Apr 21, 2019, 2:47 PM IST

இருசக்கர வாகன உற்பத்தியில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை ஹோண்டா நிறுவனம் மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் வியாபார யுக்தியை கையில் எடுத்துள்ளது.

அந்த வகையில், ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராம் நகரில் பிரத்யேக விற்பனை நிலையத்தை ஹோண்டா நிறுவனம் திறந்துள்ளது. இதில், வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு இருசக்கர வாகனத்தை மேம்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, விலை உயர்ந்த மற்றும் அதிகத் திறன் கொண்ட வாகனங்களான சிபி 300 ரக வாகனம் முதல் 1,800 சிசி வரை விற்பனை செய்யப்பட உள்ளது.

புதிய விற்பனை நிலையம் பற்றி செய்தியாளர்களிடம் அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் அலுவலர் யத்விந்தர் சிங், "புதிய விற்பனை நிலையம் ஹரியானாவில் உள்ள குருகிராம் நகரில் திறக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் அடுத்தடுத்த விரிவாக்கம் மேற்கொள்ளும் வகையில் இந்தப் புதிய விற்பனை நிலையம் செயல்படும்" எனத் தெரிவித்தார்.

Last Updated : Apr 21, 2019, 2:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details