கரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் பலரும் நாடு திரும்ப முடியாமல் சிக்கினர். இவர்களை அழைத்து வரும் பொருட்டு, மத்திய அரசு சார்பாக சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இதன் முதல்கட்டமாக துபாய், அபுதாபியில் சிக்கியிருக்கும் 363 நபர்களை அழைத்துவர இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் அனுப்பப்பட்டன. அதில் ஏர் இந்தியா 1X 452 விமானத்தில் நான்கு குழந்தைகள் உள்பட 177 பயணிகள் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினர்.