தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முதல் பெண் விங் கமாண்டர் விஜயலட்சுமி ரமணன் மரணம் - விஷிஸிஸ்ட் சேவா விருது

பெங்களூரு: இந்திய விமானப் படையின் முதல் பெண் விங் கமாண்டர் விஜயலட்சுமி ரமணன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 96.

விஜயலட்சுமி ரமணன்
விஜயலட்சுமி ரமணன்

By

Published : Oct 22, 2020, 10:59 PM IST

பெங்களூருவில் 1924ஆம் ஆண்டு பிறந்த விஜயலட்சுமி மருத்துவம் படித்து இந்திய ராணுவத்தில் மருத்துவர்கள் பிரிவில் 1955ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அதன்பின் அவர் விமானப் படைப் பிரிவில் பணியாற்ற பணியமர்த்தப்பட்டார்.

அவர் பல்வேறு விமானப்படை மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது போரில் காயமடையும் வீரர்களுக்கும் சிகிச்சை அளித்துள்ளார்.

1972ஆம் ஆண்டு விஜயலட்சுமி ரமணன் முதல் பெண் விங் கமாண்டராகப் பதவி உயர்வு பெற்றார். இவரது சேவைக்காக 1977ஆம் ஆண்டு 'விஷிஸிஸ்ட் சேவா' விருது (Vishisht Seva Medal) பெற்றார். அதன்பின் 1979ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.

இவரது கணவர் கே.வி. ரமணனும் இந்திய விமானப்படை அலுவலர் ஆவார். விஜயலட்சுமி ஓய்வுக்குப் பின் பெங்களூருவில் உள்ள மகள், மகனுடன் வசித்து வந்தார்.

கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் கொண்ட இவர் மாணவர்களுக்கு அதைக் கற்றுக் கொடுத்து வந்தார். இந்தநிலையில், விஜயலட்சுமி ரமணன் (96) வயது முதிர்வு காரணமாக காலமானார்.

ABOUT THE AUTHOR

...view details