தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியுரிமை திருத்தச் சட்டம்: கர்நாடகாவில் முதல் தடுப்புக் காவல் நிலையம் அமைப்பு? - First detention centre in Karnataka to house illegal immigrants

பெங்களூரு: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நாடு தழுவிய எதிர்ப்புக்களுக்கு மத்தியில், கர்நாடகாவின் முதல் தடுப்புக் காவல் நிலையம் பெங்களூருவில் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

First detention centre in Karnataka to house illegal immigrants
First detention centre in Karnataka to house illegal immigrants

By

Published : Dec 26, 2019, 8:14 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நாடு தழுவிய எதிர்ப்புக்களுக்கு மத்தியில், கர்நாடகாவின் முதல் தடுப்புக் காவல் நிலையம் பெங்களூருவுக்கு அருகிலுள்ள சோண்டேகோப்பா கிராமத்தில் திறக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் பல அறைகள், ஒரு சமையலறை மற்றும் கழிப்பறைகள் கொண்ட வசதி தயாராக வைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், 'தடுப்பு மையம்' என்ற சொல்லை கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை ஆட்சேபித்தார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தகுதிவாய்ந்த வகையில், இது ஒரு தடுப்பு மையம் அல்ல. குடியுரிமை பிரச்னையில் ஒருவரை தடுத்து வைக்க எந்த நோக்கமும் இல்லை" என்று கூறினார். அவரின் கூற்றுப்படி, இந்த வசதியைத் தயார் நிலையில் வைத்திருப்பது, குற்றச் செயல்களில் ஈடுபடும் ஆப்பிரிக்க நாட்டினரை அங்கேயே வைத்து, அவர்களை தங்கள் தேசத்திற்கு திருப்பி அனுப்புவது மட்டுமே" என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிடட் வெளிநாடுகளிலிருந்து அகதியாக இந்தியா வந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது. அதுவும் அவர்கள் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னர் வந்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க: சந்திரசேகர் ராவுடன், அசாதுதீன் ஓவைசி திடீர் சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details