கரோனா அச்சுறுத்தல்: இந்தியாவில் உயிரிழந்த முதல் மருத்துவர் - கரோனா அச்சுறுத்தல்
12:00 April 09
போபால்: கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவர் மத்தியப் பிரதேசத்தில் உயிரிழந்துள்ளார்.
கரோனா வைரஸ் நோய் இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. இதுவரை 5,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 166 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.
இதனிடையே, இந்நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் மத்தியப் பிரதேசம் இந்தூரில் உயிரிழந்துள்ளார். இந்தூரில் மட்டும் இதுவரை கரோனாவால் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 213ஆக அதிகரத்துள்ளது.