உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துவருகிறது. முக்கியமாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன.
சர்தார் பட்டேல் கரோனா மையத்திலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய முதல் நபர்! - கரோனா வைரஸ் அச்சுறுத்தல்
டெல்லி: உலகின் மிகப் பெரிய சர்தார் பட்டேல் கரோனா சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த முதல் கரோனா நோயாளி பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

டெல்லியில் கரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக உலகில் மிகப்பெரிய சிறப்பு கரோனா மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. பத்தாயிரம் படுக்கை வசதிகளுடன் கொண்ட இம்மையத்திற்கு சர்தார் பட்டேல் மையம் என்று பெயிரிடப்பட்டது.
இம்மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த முதல் கரோனா நோயாளி தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். டெல்லியின் சர்தார்பூர் பகுதியைச் சேர்ந்த சோமபீஸ் என்ற அந்த நோயாளிக்கு காவலர்கள் மலர் கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளனர். தற்போதையை நிலவரப்படி, இம்மையத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.