ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா இரண்டாக பிரிந்ததற்குப் பிறகு, ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக ஜிதேந்திர குமார் மகேஸ்வரி இன்று பதவியேற்றார். ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆளுநர் பிஸ்வா பூஷன் ஹரிச்சந்தன் உள்ளிட்டோர் முன்னிலையில் நீதிபதி ஜிதேந்திரகுமார் மகேஸ்வரி பதவியேற்றுக் கொண்டார்.
தெலங்கானா பிரிவுக்குப்பின் ஆந்திராவின் முதல் தலைமை நீதிபதி பதவியேற்பு!
அமராவதி: ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக ஜிதேந்திர குமார் மகேஸ்வரி முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
chief-justice
2005ஆம் ஆண்டு ஜிதேந்திர குமார் மகேஸ்வரி கூடுதல் நீதிபதியாக மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் பணி புரிந்தார். அதையடுத்து 2008ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாணவர்கள் முன்பாக சிகரெட் பிடித்த ஆசிரியர், உடனடியாக இடைநீக்கம்!