ஹரியானா: ஐந்து ரஃபேல் போர் விமானங்கள் அம்பாலாவிலுள்ள விமானப் படைத் தளத்தில் பெரும் வரவேற்புடன் தரையிறக்கப்பட்டன.
ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அல் தஃப்ராவிலிருந்து இந்த விமானங்கள் வந்தடைந்தன. போர் விமானங்கள் வருகையையொட்டி அம்பாலா விமானப்படை தளம் அருகேயுள்ள நான்கு கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விமான வருகையின்போது அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது. அத்துடன், மொட்டை மாடி, வீட்டின் கூரை மீது ஏறியும், அருகிலுள்ள பகுதிகளிலிருந்தும் புகைப்படம் எடுக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்ததாக அம்பாலாவின் போக்குவரத்து காவல் துறை துணை கண்காணிப்பாளர் முனிஷ் செகல் தெரிவித்துள்ளார்.
'காற்று மாசால் இந்தியர்களின் ஆயுட்காலம் 5.2 ஆண்டுகள் குறைந்துள்ளது' - ஆய்வில் தகவல்
மேலும், விமானப்படை தளம் அமைந்துள்ள அம்பாலா பகுதியில் ட்ரோன்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த விமானங்கள் அனைத்தும் பிரான்ஸிலிருந்து கடந்த திங்கள்கிழமை (ஜூலை 27) புறப்பட்டன. இதைத்தொடர்ந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஹரியானா மாநிலம் அம்பாலாவிலுள்ள இந்திய விமானப்படை தளத்தில் இன்று (ஜூலை 29) தரையிறங்கின.