ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் மும்பை காவல் துறை ஆணையர் பரம் பிர் சிங் குறித்து அவதூறாக சில சமூகவிரோதிகள் பதிவிட்டுவந்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் மும்பை காவல் ஆணையர் குறித்து அவதூறு பதிவு! - சமூக ஊடகங்களில் மும்பை காவல் ஆணையரை குறித்து அவதூறாக பதிவு
மும்பை: காவல் ஆணையர் குறித்து அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பிய கும்பல் மீது இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ol
இது குறித்து தகவலறிந்த சைபர் க்ரைம் காவல் துறையினர் இரண்டு வழக்குகளைப் பதிவுசெய்துள்ளனர். இதில் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமையும், மற்றொரு வழக்கு கடந்த மாதமும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ஆணையர் குறித்து தவறான தகவல்களைப் பரப்ப பல்வேறு சமூக வலைதளக் கணக்குகளை இந்த டெக்கி கும்பல் பயன்படுத்தியிருப்பது சைபர் செல் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தப் போலி கணக்குகளின் பின்னணியில் உள்ள நபர்களை சைபர் காவல் பிரிவு தீவிரமாகத் தேடிவருகிறது.