தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பையில், சிவசேனா ஆதரவாளர் மீது துப்பாக்கிச் சூடு - சிவசேனா ஆதரவாளர் மீது துப்பாக்கிச் சூடு

மும்பை: சிவசேனா ஆதரவாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Firing on Shiv Sena functionary in Mumbai, assailant held
Firing on Shiv Sena functionary in Mumbai, assailant held

By

Published : Dec 27, 2019, 11:07 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் சந்திரசேகர் ஜாதவ். சிவசேனா கட்சியின் ஆதரவாளரான இவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று (டிச27) காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த சம்பவம் மும்பை புறநகர் பகுதியான விக்ரோலி பகுதியிலுள்ள சாய் பாபா கோயில் அருகில் நடந்தது. அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவரது உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சந்திரசேகர் ஜாதவ் மீது துப்பாக்கியால் சுட்டவர்கள் யார்? என்ன காரணம்? என்பது போன்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிங்க: ராமநாதபுரம் இளைஞர்களுக்கு நடிகர் ஆமீர் கான் வழங்கிய அறிவுரை!

ABOUT THE AUTHOR

...view details