தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Firefox: கைரேகை, குறியீட்டு பாதுகாப்பை மேம்படுத்தும் ஃபயர்ஃபாக்ஸ் ப்ரவுசர் - new technology

இணைய உலகில் பிரபலமானதும், பாதுகாப்பானதுமாக நம்பப்படும் ஃபயர்ஃபாக்ஸ் உலாவி (Firefox Browser) தனது பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகவும், பங்கு வர்த்தகம் மேற்கொள்வோருக்கான பாதுகாப்பை தடையில்லாமல் அளிப்பதற்காகவும், மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பை வெளியிடவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

firefox

By

Published : Apr 10, 2019, 11:40 AM IST

Updated : Apr 10, 2019, 11:58 AM IST

ஒரு காலகட்டத்தில் இணைய உலாவிகளில் முக்கியப் பங்கு வகித்த இணையதள எக்ஸ்புளோரெர் (Internet Explorer), தனது பயனர்களை இழந்த வந்த நிலையிலும், பாதுகாப்புத் தன்மையை அதிகம் புகுத்தி ஓரளவு தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இச்சரிவுக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது, அதற்கு போட்டியாக இருந்த கூகுள் நிறுவனத்தின் ‘குரோம்’ (Google Chrome), மொஸில்லா நிறுவனத்தின் ‘ஃபயர்ஃபாக்ஸ்’ உலாவிகளின் அதீத வளர்ச்சிதான்.

உலாவிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனிச் சிறப்புகள் உண்டு. எனினும் கூகுள் குரோம் இணைய பயனாளிகளுக்கு எளிதாக இருந்ததால், வெகுவான பயனர்களை தன் வசம் கவர்ந்திழுத்தது. இதற்கு கூகுளின் மிகப்பெரிய இணையத் தகவல் களஞ்சியம் (BIG DATA) உதவியாக இருந்தது.

இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், பொது பயன்பாட்டிற்கு புதுப்புது பதிப்புகளோடு தன்னை வெளிக்கொண்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தது மொஸில்லா. ஆம், பல குழுக்கள் இணைந்து பொது பயன்பாட்டிற்காக வெளியிடபட்ட இவ்வுலாவியின் தனித்தன்மைக்கென உலகம் முழுவதும் பயனர்கள் உள்ளனர். காரணம் இந்நிறுவனம் பாதுகாப்பு அம்சத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம்தான்.

அதன் விளைவாக, நிறுவனத்தின் தற்போதைய தகவலின்படி, தனது புதிய பதிப்பில் ஏற்கனவே உலாவியில் உள்ள பாதுகாப்பு அம்சங்களோடு, கைரேகைக்கென தனி பாதுகாப்பும், பங்கு வர்த்தகம் மேற்கொள்வோருக்கென தனிப் பாதுகாப்பும், குறியீட்டுச் சந்தையில் (Cryptocurrency Market) ஹேக்கர்கள் உள்நுழைய தடை விதிக்கும் பாதுகாப்பும் பயனர்களுக்கு ஒருசேர கிடைக்கப்பெறும் வகையில் வெளியிடப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Last Updated : Apr 10, 2019, 11:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details