குஜராத் மாநிலம் அகமதாபாத் நவரங்புராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (ஆக.6) எதிர்பாராத விதமாக அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்தில் மருத்துவமனை நோயாளிகள் எட்டு பேர் உயிரிழந்தனர். தீயணைப்புத்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த மருத்துவமனையின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 40 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்தனர். உயிர்தப்பிய நோயாளிகள் அருகிலுள்ள எஸ்விபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதற்கிடையில் பிரதமர் நரேந்திரமோடி மருத்துவமனையில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் உயிரிழந்தவர்கள் தலா ஒருவரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ .50 ஆயிரமும் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
அதையடுத்து குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி ட்விட்டர்
மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விபத்து குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாகவும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார். மேலும் அவர் காயமடைந்தவர்களை விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பின்னலாடை நிறுவனத்தில் தீ - பல லட்சம் ரூபாய் இழப்பு!