தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தற்கொலைக்கு முயன்ற தாய், மகள் பத்திரமாக மீட்பு! - கதஜோடி நதி

கட்டாக்: கதஜோடி நதியில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற தாய், மகளை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

rescue-woman-and-daughter
rescue-woman-and-daughter

By

Published : Jul 9, 2020, 9:11 AM IST

ஒடிஸா மாநிலம் புவனேஸ்வர் விஎஸ்எஸ் நகரைச் சேர்ந்த தாய், மகள் இருவரும் கட்டாக் மாவட்டத்தின் கதஜோடி நதியில் குதித்து தற்கொலை செய்ய முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்புத் துறையினர் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

இது குறித்து கட்டாக் காவல்துறையினர் கூறுகையில், "புவனேஸ்வரைச் சேர்ந்த தாய், மகள் இருவரும் குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்ய முயன்றனர். கட்டாக் - கதஜோடி நதியை இணைக்கும் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஆற்றில் குதித்தனர். இதையறிந்த அருகில் இருந்தவர்கள், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தாய், மகள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.

இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தற்கொலை முயற்சிக்கான காரணம் தொடர்பாக இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details