ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் நகரில் உள்ள ரணதம்பூர் தேசிய பூங்காவில் இருந்த பத்ரா காடுகளில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தொடர்ந்து அதிகரித்துவரும் காட்டுத் தீயால் புலிகள் வாழும் இடங்கள் அதிகளவில் பாதிப்படைந்துவருகின்றன என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவமானது, கத்தோலி, பத்ரா கிராமங்களுக்கு நடுவே உள்ள இடத்தில் நடந்துள்ளதாக வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
காட்டுத் தீ நடைபெற்ற 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு புலிகள் உள்பட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருந்ததால் அங்கு மக்கள் செல்லாமல் இருந்தனர். இதுவரை அங்கு சாலை வசதியும் இல்லாததால் காட்டுத் தீயினால் ஏற்பட்ட சேதாரத்தை கணக்கிடமுடியவில்லை என்று கூறப்படுகிறது.
டிஜிட்டல் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் காட்டுப் பகுதியை கண்காணிக்கவும், வனவிலங்குகளை பாதுகாக்கவும் இதுவரை அரசு 60 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.
இதையும் படிங்க:காலநிலை மாற்றம் விடுக்கும் எச்சரிக்கை மணிகள்!