தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நொய்டாவில் தீ விபத்து: அணைக்கும் பணிகள் தீவிரம்! - அடுக்குமாடி குடியிருப்பில் தீ

நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அதனை அணைக்கும் பணிகளில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Fire breaks out
Fire breaks out

By

Published : Jan 3, 2020, 12:30 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் செக்டார் 75 என்கிற இடத்தில் அபெக்ஸ் அதெனா சொசைட்டி (Apex Athena society) என்கிற அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது.

அந்தப் பகுதியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அந்தக் குடியிருப்பின் பாதுகாவலர் கூறுகையில், தீ விபத்து ஏற்பட்டவுடன் எச்சரிக்கை அபாய ஒலிகூட ஒலிக்கவில்லை என்றும், தன்னால் முடிந்தவரை தீயை அணைக்க முயன்றதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இந்தத் தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: 'புகழ்பெற்ற கவிஞரை இந்து விரோதி என்று அழைப்பதா?' - பாலிவுட் பாடலாசிரியர்

ABOUT THE AUTHOR

...view details